Posts

பிரெஞ்சுமொழி - உயிரெழுத்துக்களும் மெய்யெழுத்துக்களும் (FrenchMoli - French Vowels and Consonants in Tamil)

Image
ஒரு மனிதனின் உடலும் உயிரும் ஒருங்கே இணைந்து செயல்படுவது போன்றே, ஒரு மொழியின் எழுத்துக்களில் உயிரெழுத்துக்களும் மெய்யெழுத்துக்களும் இணைந்து அம்மொழியின் உயிர்மெய் ஒலிகளை தோற்றுவிக்கின்றன.  தமிழ் மொழியில் போன்று, ஒவ்வொரு உயிர்மெய் எழுத்துக்குமான தனித்தனி எழுத்துருக்கள் ஐரோப்பிய மொழிகளில் கிடையாது. எனவே அம்மொழியில் ஒரு மெய்யெழுத்தையும் உயிரெழுத்தையும் (சில ஒன்றுக்கு மேல்) சேர்த்து எழுதியே உயிர்மெய் ஒலிகள் பெறப்படுகின்றன. எனவே பிரெஞ்சு மொழியில் எவ்வாறு ஒரு மெய்யெழுத்து ஒலியும், உயிரெழுத்து ஒலியும் இணைந்து பயன்படுகிறது என்பதை அறிந்துக்கொள்ளுதல் மிகவும் அவசியம்.  பிரெஞ்சுமொழி அரிச்சுவடியில் உள்ள 26 எழுத்துக்களில் 6 உயிர் எழுத்துக்களும் 20 மெய்யெழுத்துக்களும் உள்ளன.   முதலில், பிரெஞ்சு மொழியில் உள்ள உயிரெழுத்துக்களை பார்ப்போம். பிரெஞ்சு மொழியில் உயிரெழுத்துக்களை " லே வொயல்" (Les Voyelles) என்று அழைப்பர்.  பிரெஞ்சு உயிரெழுத்துக்கள் (Les Voyelles) A = அ E = ஹுஃ  I   =  ஈ  O = ஓ U = ஊh Y = இ (அரை உயிரெழுத்து (La-semi voyelle)) குறிப்பு: ஆங்கிலத்...

பிரெஞ்சுமொழி அரிச்சுவடி (French Alphabet in Tamil)

Image
பிரெஞ்சுமொழி | FrenchMoli - Learn French Alphabet in Tamil ஆங்கில அரிச்சுவடியில் போன்றே பிரெஞ்சு அரிச்சுவடியிலும் அதே 26 உரோமன் எழுத்துக்களே உள்ளன. ஆனாலும் ஆங்கில எழுத்துக்களின் ஒலிப்பு முறைக்கும் பிரெஞ்சு எழுத்துக்களின் ஒலிப்பு முறைக்கும் இடையே நிறைய வேறுபாடு உள்ளது.  எனவே பிரெஞ்சு மொழியை முழுமையாக கற்பதற்கு, நாம் முதலில் பிரெஞ்சு அரிச்சுவடியில் உள்ள எழுத்துக்களின் ஒலிப்பு முறையை சரியாக ஒலிக்க (உச்சரிக்க) கற்றுக்கொள்ள வேண்டும். கவனிக்கவும் : எழுத்துக்களின் வரிவடிவம் ஒரே மாதிரி இருப்பதால், ஆங்கில அரிச்சுவடியில் உள்ள எழுத்துகளை ஒலிப்பது/ உச்சரிப்பது போன்று பிரெஞ்சு எழுத்துக்களை உச்சரிக்கக் கூடாது. பிரெஞ்சுமொழியில், பிரெஞ்சு அரிச்சுவடியை “ லல்fபbபே fப்ரொன்சே” (L’alphabet Français) என்பர். இச்சொற்றொடரை பார்த்தீர்களானால், இதில் உள்ள `t` மற்றும் கடைசியில் உள்ள `s` எழுத்துக்கள் ஒலிக்கப்படுவதில்லை. அவற்றை பிரெஞ்சில் மௌன எழுத்துக்கள் (Lettres de silence) என்பர். அவற்றை எதிர்வரும் "பிரெஞ்சு ஒலிப்பு முறைமை" பாடங்களில் விரிவாகப் பார்க்கலாம்.  இன்று இப்பாடத்தை மட்டும் பார்ப்போம். பிரெஞ...

FrenchMoli Introduction - பிரெஞ்சுமொழி வலைத்தள அறிமுகம்

Image
வணக்கம்! வாருங்கள் உறவுகளே!   இந்தப் பிரெஞ்சுமொழி - FRENCHMOLI வலைத்தளத்திற்கு வருகை தந்திருக்கும் உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்பதில் மகிழ்ச்சி!  முதலில், இத்தளத்தைப் பற்றியும் இதன் பாடத் திட்டம் பற்றியும் ஒரு சில வரிகள் உங்களிடம் பகிர்ந்துக்கொள்ள விரும்புகிறேன். நான் இத்தளத்தை ஆரம்பிக்கும் பொழுது, இதன் முதல் பாடம் எதுவாக இருக்கவேண்டும் என எண்ணியதில், புதிதாக ஒருவர் பிரான்சுக்கோ அல்லது பிரெஞ்சு மொழி பேசும் காலனியொன்றுக்கோ காலடி வைத்ததும், அவர் அங்கே காணும் ஒரு பிரெஞ்சு மொழியினருடன் எவ்வாறு தொடர்பு கொள்வார்? அவரது தொடர்பாடலுக்கு முதலில் பயன்படும் சொற்கள் எவையாக இருக்கும் என நாம் பெற்றுக்கொண்ட பட்டறிவின் அடிப்படையில்; "முகமன் சொற்கள்", "அறிமுக உரையாடல் சொற்கள்", சிறிய உரையாடலுக்கு தேவையான "அடிக்கடி பயன்படும் சொற்றொடர்கள்" போன்றவற்றை கற்பது இன்றியமையாததும் முதன்மையானதும் என்பதை உணர்ந்தேன். எனவே அவைகளே இத்தளத்தின் அடிப்படைப் பாடங்களாக வழங்கப்பட்டுள்ளன.  பிரெஞ்சு மொழி பேசும் ஒரு நாட்டில் பிறக்கும் தமிழ்க் குழந்தைகள் பள்ளிக்கு செல்லும் முன்பே, பிரெஞ்சு மொழிய...