Welcome to FrenchMoli! - பிரெஞ்சுமொழி வலைத்தளத்துக்கு நல்வரவு!

வணக்கம்! வாருங்கள் உறவுகளே! Bienvenue en Frenchmoli ! புதிதாக தொடங்கப்பட்ட இந்தப் பிரெஞ்சுமொழி (FRENCHMOLI) வலைத்தளத்திற்கு உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்பதில் மகிழ்ச்சி! நீங்கள் பிரான்சுக்கு புதிதாக வந்தவராக இருக்கலாம். நீங்கள் பிரான்சுக்கு வந்து ஒரு குறிப்பிட்ட காலமாகியும் கூட பிரெஞ்சு மொழியை கற்கும் வாய்ப்பு, நேரம் கிட்டாதவராக இருக்கலாம். பிரான்சு வந்து வதிவிட/ குடியுரிமை போன்ற நிலையை எட்டுவதற்கான, பிரான்சு அரசு கோரும் A1, A2, B1 போன்ற பிரெஞ்சுமொழி தகமைகளுக்காக பிரெஞ்சு கற்றுக்கொண்டிருப்பவராகவும் இருக்கலாம். பிரெஞ்சு மொழியை கற்று, கல்வி தகமைகளுடன், பிரான்சில் கல்வி வீசா அல்லது தொழில் வீசா பெறுவதற்கான முயற்சியில் உள்ளவராகவும் இருக்கலாம். பிரான்சு நாட்டிற்கு வரும் எண்ணம் அல்லது அம்முயற்சியில் பிரெஞ்சு கற்கும் ஆர்வத்தில் உள்ளவராகவும் இருக்கலாம். பிரெஞ்சு கற்றிருப்பினும், மேலும் அதனை மேம்படுத்திக்கொள்ளும் நோக்குடையவராகவும் இருக்கலாம். எதுவானாலும் பரவாயில்லை, இதோ இது உங்களுக்கான தளம்! இந்தப் பிரெஞ்சுமொழி வலைத்தளத்தில், அடிப்படை முகமன் சொற்கள் முதல் பிரெஞ்சு இலக்கணம் வரை அனைத்துப்...