Frenchmoli | பிரெஞ்சுமொழி: பிரெஞ்சு மாதங்கள் (French Months of the Year in Tamil)

FrenchMoli : Les mois de l'année en tamoul வணக்கம் உறவுகளே! இன்றைய பிரெஞ்சுமொழி (FrenchMoli) பாடத்தில், நாம் பார்க்கப் போவது பிரெஞ்சு மொழியில் மாதங்களின் பெயர்களை எப்படி கூறவேண்டும் என்பதையாகும். அநேகமாக இவை தமிழர்களான எமக்கு பெரும் சிரமம் இன்றி எளிதாக கற்கக் கூடியதாக இருக்கும் என்று நினைக்கின்றேன். ஏனெனில், இவை நாம் அன்றாடம் பயன்படுத்தும் ஆங்கில மாதங்களின் பெயர்கள் போல் கிட்டத்தட்ட இருப்பது என்பதுவே ஆகும். இருப்பினும் பிரெஞ்சு மொழியில் மாதங்களின் பெயர்களை எழுதும் முறையும் ஒலிக்கும் முறையும் ஆங்கிலத்தைப் போன்றல்லாமல் வேறுபட்டவை. அதனை சரியாக விளங்கிக்கொண்டோமானால், எளிதாக பிரெஞ்சு மாதங்களின் பெயர்களை நினைவில் வைத்துக்கொள்ளலாம். இன்றைய இப்பாடமும் பிரெஞ்சு மொழியின் அடிப்படை பாடங்களில் ஒன்றாகும். பிரெஞ்சில் மாதங்களை “Les mois de l'année” என்பர். பிரெஞ்சில் “ஆண்டின் மாதங்கள் தமிழில்” என்பதனை “Les mois de l'année en tamoul” என கூறவேண்டும். பிரெஞ்சு பிரெஞ்சு ஒலிப்பு தமிழ் janvier ஜோன்வியே சனவரி février fபெவ்ரியே பெப்ரவரி mars மார்ஸ் மார்ச் avril அவ்ரீல் ஏப்ரல் mai ...