Posts

Showing posts with the label பிரெஞ்சு மொழி

Frenchmoli | பிரெஞ்சுமொழி: பிரெஞ்சு மாதங்கள் (French Months of the Year in Tamil)

Image
FrenchMoli :  Les mois de l'année en tamoul வணக்கம் உறவுகளே! இன்றைய பிரெஞ்சுமொழி (FrenchMoli) பாடத்தில், நாம் பார்க்கப் போவது பிரெஞ்சு மொழியில் மாதங்களின் பெயர்களை எப்படி கூறவேண்டும் என்பதையாகும்.  அநேகமாக இவை தமிழர்களான எமக்கு பெரும் சிரமம் இன்றி எளிதாக கற்கக் கூடியதாக இருக்கும் என்று நினைக்கின்றேன். ஏனெனில், இவை நாம் அன்றாடம் பயன்படுத்தும் ஆங்கில மாதங்களின் பெயர்கள் போல் கிட்டத்தட்ட இருப்பது என்பதுவே ஆகும்.  இருப்பினும் பிரெஞ்சு மொழியில் மாதங்களின் பெயர்களை எழுதும் முறையும் ஒலிக்கும் முறையும் ஆங்கிலத்தைப் போன்றல்லாமல்  வேறுபட்டவை. அதனை சரியாக விளங்கிக்கொண்டோமானால், எளிதாக பிரெஞ்சு மாதங்களின் பெயர்களை நினைவில் வைத்துக்கொள்ளலாம்.  இன்றைய இப்பாடமும் பிரெஞ்சு மொழியின் அடிப்படை பாடங்களில் ஒன்றாகும். பிரெஞ்சில் மாதங்களை “Les mois de l'année” என்பர். பிரெஞ்சில் “ஆண்டின் மாதங்கள் தமிழில்” என்பதனை “Les mois de l'année en tamoul” என கூறவேண்டும். பிரெஞ்சு பிரெஞ்சு ஒலிப்பு தமிழ் janvier ஜோன்வியே சனவரி février fபெவ்ரியே பெப்ரவரி mars மார்ஸ் மார்ச் avril அவ்ரீல் ஏப்ரல் mai ...

பிரெஞ்சு கிழமை நாட்கள் (French Days of the Week in Tamil)

Image
வணக்கம் உறவுகளே!  இன்று நாம் இந்த பிரஞ்சுமொழி பாடத்தில், பிரெஞ்சு மொழியில் எப்படி கிழமை நாட்களை கூறுவது என்று பார்ப்போம். பிரெஞ்சு மொழியை கற்கும் நாம் முதலில் பிரெஞ்சு மொழியின் அடிப்படை சொற்களை அறிந்துக் கொள்ள வேண்டும். பிரெஞ்சு மொழியின் கிழமை நாட்களின் பெயர்களையும் அவற்றை எப்படி பிரெஞ்சில் ஒலிப்பது என்பதையும் கட்டாயம் அறிந்து வைத்துக்கொள்ள வேண்டிய ஒன்றுதான்.  "கிழமையின் நாட்கள்" என்பதை பிரெஞ்சு மொழியில் “Les jours de la semaine” என்பர். பிரெஞ்சு கிழமை நாட்களின் பிரெஞ்சு ஒலிப்பை எளிதாக கற்றுக்கொள்ளும் நோக்கில், அவற்றை நீல நிறத்தில் வேறுபடுத்தி காட்டப்பட்டுள்ளது. அதேவேளை அவற்றை தமிழ் எழுத்துக்களில் மட்டுமே எழுதிக் காட்ட முடியாது என்பதால், தமிழில் புழங்கும் கிரந்த எழுத்துக்களையும், உரோமன் எழுத்துக்களையும் சேர்த்தே எழுதிக்காட்டப்பட்டுள்ளன என்பதை பொறுத்தருள்க. பிரெஞ்சு பிரெஞ்சு ஒலிப்பு தமிழ் Lundi லந்தி திங்கள் Mardi மர்dதி செவ்வாய் Mercredi மெர்கிறdதி புதன் Jeudi ஜுdதி வியாழன் Vendredi வோந்திறdதி வெள்ளி Samdi சம்dதி சனி Dimanche dதிமோஷ் ஞாயிறு இ து ஒரு குரும்பாடமாகும். இருப்பினு...

பிரெஞ்சுமொழி அரிச்சுவடி (French Alphabet in Tamil)

Image
பிரெஞ்சுமொழி | FrenchMoli - Learn French Alphabet in Tamil ஆங்கில அரிச்சுவடியில் போன்றே பிரெஞ்சு அரிச்சுவடியிலும் அதே 26 உரோமன் எழுத்துக்களே உள்ளன. ஆனாலும் ஆங்கில எழுத்துக்களின் ஒலிப்பு முறைக்கும் பிரெஞ்சு எழுத்துக்களின் ஒலிப்பு முறைக்கும் இடையே நிறைய வேறுபாடு உள்ளது.  எனவே பிரெஞ்சு மொழியை முழுமையாக கற்பதற்கு, நாம் முதலில் பிரெஞ்சு அரிச்சுவடியில் உள்ள எழுத்துக்களின் ஒலிப்பு முறையை சரியாக ஒலிக்க (உச்சரிக்க) கற்றுக்கொள்ள வேண்டும். கவனிக்கவும் : எழுத்துக்களின் வரிவடிவம் ஒரே மாதிரி இருப்பதால், ஆங்கில அரிச்சுவடியில் உள்ள எழுத்துகளை ஒலிப்பது/ உச்சரிப்பது போன்று பிரெஞ்சு எழுத்துக்களை உச்சரிக்கக் கூடாது. பிரெஞ்சுமொழியில், பிரெஞ்சு அரிச்சுவடியை “ லல்fபbபே fப்ரொன்சே” (L’alphabet Français) என்பர். இச்சொற்றொடரை பார்த்தீர்களானால், இதில் உள்ள `t` மற்றும் கடைசியில் உள்ள `s` எழுத்துக்கள் ஒலிக்கப்படுவதில்லை. அவற்றை பிரெஞ்சில் மௌன எழுத்துக்கள் (Lettres de silence) என்பர். அவற்றை எதிர்வரும் "பிரெஞ்சு ஒலிப்பு முறைமை" பாடங்களில் விரிவாகப் பார்க்கலாம்.  இன்று இப்பாடத்தை மட்டும் பார்ப்போம். பிரெஞ...