Frenchmoli | பிரெஞ்சுமொழி: பிரெஞ்சு மாதங்கள் (French Months of the Year in Tamil)

பிரெஞ்சு மொழி - Frenchmoli
FrenchMoli : Les mois de l'année en tamoul

வணக்கம் உறவுகளே!

இன்றைய பிரெஞ்சுமொழி (FrenchMoli) பாடத்தில், நாம் பார்க்கப் போவது பிரெஞ்சு மொழியில் மாதங்களின் பெயர்களை எப்படி கூறவேண்டும் என்பதையாகும். 


அநேகமாக இவை தமிழர்களான எமக்கு பெரும் சிரமம் இன்றி எளிதாக கற்கக் கூடியதாக இருக்கும் என்று நினைக்கின்றேன். ஏனெனில், இவை நாம் அன்றாடம் பயன்படுத்தும் ஆங்கில மாதங்களின் பெயர்கள் போல் கிட்டத்தட்ட இருப்பது என்பதுவே ஆகும். 


இருப்பினும் பிரெஞ்சு மொழியில் மாதங்களின் பெயர்களை எழுதும் முறையும் ஒலிக்கும் முறையும் ஆங்கிலத்தைப் போன்றல்லாமல்  வேறுபட்டவை. அதனை சரியாக விளங்கிக்கொண்டோமானால், எளிதாக பிரெஞ்சு மாதங்களின் பெயர்களை நினைவில் வைத்துக்கொள்ளலாம். 

  • இன்றைய இப்பாடமும் பிரெஞ்சு மொழியின் அடிப்படை பாடங்களில் ஒன்றாகும். பிரெஞ்சில் மாதங்களை “Les mois de l'année” என்பர். பிரெஞ்சில் “ஆண்டின் மாதங்கள் தமிழில்” என்பதனை “Les mois de l'année en tamoul” என கூறவேண்டும்.

பிரெஞ்சு

பிரெஞ்சு ஒலிப்பு

தமிழ்

janvier

ஜோன்வியே

சனவரி

février

fபெவ்ரியே

பெப்ரவரி

mars

மார்ஸ்

மார்ச்

avril

அவ்ரீல்

ஏப்ரல்

mai

மேய்

மே

juin

ஜுவான்

யூன்

juillet

ஜூய்யீயே

யூலை

août

ஊத்

ஆகத்து

septembre

செப்தோம்bப்ர்

செப்டெம்பர்

octobre

ஒக்தோbப்ர்

ஒக்டோபர்

novembre

நொவோம்bப்ர்

நவம்பர்

décembre

Dதெசோம்bப்ர் 

டிசம்பர்


மேலேயுள்ள பிரெஞ்சு மாதங்களின் பெயர்களைப் பார்த்தால், ஆங்கிலத்தில் மாதங்களின் பெயர்களை எப்படி ஒலிக்கிறோமோ கிட்டத்தட்ட அதேபோன்றே இருப்பதை கவனிக்கலாம். ஆனால், இப்பெயர்களின் எழுத்துக்கள் வேறுபட்டிருப்பதைக் கூர்ந்து பாருங்கள். அத்துடன் ஒலிப்பு பயிற்சிக்காக நீல நிறத்தில் வேறுபடுத்திக் காட்டியிருப்பதையும் கவனியுங்கள். 

  • "மே" மற்றும் "யூன்" மாதப் பெயர்களில் கடைசி எழுத்து சற்று மாறுப்பட்ட வடிவில் சிறிய எழுத்தாக இடப்பட்டிருக்கும். அவ்வெழுத்தின் ஒலியை முழுமையாக ஒலிக்காமல், மூக்கொலியுடன் ஒலிக்க வேண்டியவை என்பதை கருத்தில் கொள்ளவும்.
  • அதேபோன்றே செப்டெம்பர், ஒக்டோபர், நவம்பர், டிசம்பர் போன்ற மாதங்களின் பிரெஞ்சு பெயர்களிலும் கடைசி எழுத்து சிறிய எழுத்தாக இடப்பட்டிருக்கும்; அதற்கான காரணம் அவ்வெழுத்துக்கள் முழுமையாக அல்லாமல் மூக்கொலியுடன் ஒலிக்கப்படுபவை என்பதை குறிக்கவே அவ்வாறு இடப்பட்டுள்ளன என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

இப்பாடம் ஒரு சிறிய பாடமாகும். பிரெஞ்சு மொழியில் சொற்களை இணைத்து முழு வாக்கியமாக்குவதற்கு முன் அல்லது பிரெஞ்சு இலக்கணம் கற்பதற்கு முன், அடிப்படையில் நாம் அறிந்துக்கொள்ள வேண்டிய சொற்களில் இவையும் ஒன்றாகும்.


இந்த பிரெஞ்சு மாதப் பெயர்களை திரும்பத் திரும்ப எழுதி அவற்றை எளிதில் மனதில் பதியும் அளவிற்கு அல்லது எழுதும் அளவிற்கு பயிற்சி செய்துக்கொள்ளுங்கள். ஒலிப்பு பயிற்சி பெற விரும்புவோர் மீண்டும் மீண்டும் வாசித்து சொற்களை மனதில் பதித்துக் கொள்ளுங்கள். 


மீண்டும் அடுத்தப் பாடத்தில் சந்திப்போம். 

  • இந்த பிரெஞ்சு பாடங்கள் பயனுள்ளவை என நீங்கள் கருதினால், இவற்றை பிரெஞ்சு கற்க விரும்பும் மாணவர்களுக்கும் ஆர்வலர்களுக்கும் பகிருங்கள். உங்கள் முகநூல் நண்பர்களிடமும் நீங்கள் உருப்பினராக இருக்கும் குழுமங்களிலும் கூட பகிரலாம். அது பிரெஞ்சு கற்கும் எவரேனும் ஒருவருக்கு நீங்களும் உதவியதாக இருக்கும். 


நன்றி!


அன்புடன்

ச. தங்கவடிவேல் | SA THANGAWADIVEL

_ _ _

பி.கு.: கீழுள்ள ஐகொன்களை சொடுக்கி, எமது சமூக வலைப்பக்கங்களான: முகநூல் | இன்சுடாகிராம் | டுவிட்டர் | பின்டரசுட் | லின்கிடின் போன்றவற்றின் ஊடாகவும் எம்முடம் இணைந்துக்கொள்ளலாம்.

        

Comments

Popular posts from this blog

பிரெஞ்சு எண்கள் 1 - 100 (French Numbers 1 - 100 in Tamil)

பிரெஞ்சு கிழமை நாட்கள் (French Days of the Week in Tamil)