Welcome to FrenchMoli! - பிரெஞ்சுமொழி வலைத்தளத்துக்கு நல்வரவு!

பிரெஞ்சு மொழி கற்போம்
வணக்கம்! வாருங்கள் உறவுகளே! Bienvenue en Frenchmoli !

புதிதாக தொடங்கப்பட்ட இந்தப் பிரெஞ்சுமொழி (FRENCHMOLI) வலைத்தளத்திற்கு உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்பதில் மகிழ்ச்சி!
  • நீங்கள் பிரான்சுக்கு புதிதாக வந்தவராக இருக்கலாம்.
  • நீங்கள் பிரான்சுக்கு வந்து ஒரு குறிப்பிட்ட காலமாகியும் கூட பிரெஞ்சு மொழியை கற்கும் வாய்ப்பு, நேரம் கிட்டாதவராக இருக்கலாம்.
  • பிரான்சு வந்து வதிவிட/ குடியுரிமை போன்ற நிலையை எட்டுவதற்கான, பிரான்சு அரசு கோரும் A1, A2, B1 போன்ற பிரெஞ்சுமொழி தகமைகளுக்காக பிரெஞ்சு கற்றுக்கொண்டிருப்பவராகவும் இருக்கலாம்.
  • பிரெஞ்சு மொழியை கற்று, கல்வி தகமைகளுடன், பிரான்சில் கல்வி வீசா அல்லது தொழில் வீசா பெறுவதற்கான முயற்சியில் உள்ளவராகவும் இருக்கலாம்.
  • பிரான்சு நாட்டிற்கு வரும் எண்ணம் அல்லது அம்முயற்சியில் பிரெஞ்சு கற்கும் ஆர்வத்தில் உள்ளவராகவும் இருக்கலாம்.
  • பிரெஞ்சு கற்றிருப்பினும், மேலும் அதனை மேம்படுத்திக்கொள்ளும் நோக்குடையவராகவும் இருக்கலாம்.
எதுவானாலும் பரவாயில்லை, இதோ இது உங்களுக்கான தளம்!
இந்தப் பிரெஞ்சுமொழி வலைத்தளத்தில், அடிப்படை முகமன் சொற்கள் முதல் பிரெஞ்சு இலக்கணம் வரை அனைத்துப் பாடங்களும் முற்றிலும் இலவசமாக  வழங்கப்படும்.

நீங்கள் செய்ய வேண்டியது, இந்தப் பிரெஞ்சு மொழி வலைத்தளத்தை தொடர்ந்து பின்பற்றுவது மட்டுமே.
விரும்புவோர் எந்த வயதினரானாலும் இணைந்து கற்கலாம். முழுமையான தமிழ் விளக்கத்துடன் பிரெஞ்சு பாடப் பயிற்சிகள்!
அதுமட்டுமன்றி, பிரான்சின் வரலாறு, பிரெஞ்சு புரட்சி, சிறப்பு ஆக்கங்கள் என பிரான்சு மற்றும் பிரெஞ்சு மொழி தொடர்பான பயனுள்ள பல்வேறு விடயங்களையும் நீங்கள் இத்தளத்தில் எதிர்பார்க்கலாம்.
உங்கள் பங்களிப்பு:


அன்பின் உறவுகளே! இந்த இணைய வழி பிரெஞ்சுப் பாடங்கள், எந்த இலாப நோக்கமும் இன்றி, எமது சமூக நலஞ்சார் நோக்கில் மட்டுமே வழங்கப்படுகின்றன. இவை எந்தளவிற்கு பயனுள்ளவை என்பதை நீங்கள் தான் கூறவேண்டும். இப்பாடங்கள் பயனுள்ளவை என நீங்கள் கருதினால், இத்தளத்தை உங்கள் நண்பர்கள், உறவினர்கள், மற்றும் பிரெஞ்சு கற்க விரும்பும் ஆர்வலர்கள் என அனைவரிடம் கொண்டு செல்லுங்கள். உங்கள் சமூக வலைப்பக்கங்கள் ஊடாகவும் பகிரலாம். 

நன்றி!

அன்புடன்
ச. தங்கவடிவேல் | Sa. Thangawadivel
Île-de-France, France

பி.கு.: கீழுள்ள ஐகொன்களை சொடுக்கி, எமது சமூக வலைப்பக்கங்களான: முகநூல் | இன்சுடாகிராம் | டுவிட்டர் | பின்டரசுட் | லின்கிடின் போன்றவற்றின் ஊடாகவும் எம்முடம் இணைந்துக்கொள்ளலாம். எமது முகநூல் பக்கத்தில் "இன்று ஒரு சொல்" எனும் ஒரு பகுதியில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பிரெஞ்சு சொல் வழங்கப்பட்டுக்கொண்டிருகிறது. அப்பக்கத்தை பின்தொடர்ந்து உங்கள் பிரெஞ்சு சொல்வளத்தையும் பெருக்கிக்கொள்ளலாம்.

        

Comments

  1. உங்களின் மின்னஞ்சல் முகவரியை அனுப்புங்கள்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பிரெஞ்சு எண்கள் 1 - 100 (French Numbers 1 - 100 in Tamil)

பிரெஞ்சு கிழமை நாட்கள் (French Days of the Week in Tamil)

Frenchmoli | பிரெஞ்சுமொழி: பிரெஞ்சு மாதங்கள் (French Months of the Year in Tamil)